சேலம் அருகே நாய் குறுக்கே சென்றதால், ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் நடத்துநர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செட்டிச்சாவடி பகுதியில் இருந்து சேலம் நகரப் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. பேருந்து படிக்கட்டில் நின்றபடி, நடத்துநர் ராஜேந்திரன் பயணச்சீட்டுகளை கொடுத்து வந்தார். அப்போது பேருந்து முன்பாக நாய் குறுக்கே சென்றதால், ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் நடத்துநர் ராஜேந்திரன் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.





