தேனி அருகே அன்னஞ்சி யில் சிராஸ்தார் வீட்டில் 5 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தேனி அருகே உள்ள அன்னஞ்சி என்ஜிஓ காலனி யில் வசித்து வருபவர் ஜஸ்டின் சாந்தப்பா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிராஸ்தாராக பணிபுரிகின்றார்.
இவர் தனது மனைவியுடன் உறவினர்கள் வீட்டிற்கு நாகர்கோவில் வரை சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள ரூ.5 லட்சம் பணமும் 25 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜஸ்டின் சாந்தப்பா, காவல்துறையில் புகார் அளித்தார். இதை அடுத்து அல்லிநகரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




