
இந்தாண்டுக்கான சிறந்த பிரான்ஸ் வீராக பிரபல கால்பந்து வீரர் நெயமர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாரீசில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்டது.
காயம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நெயமர், இந்த சிறந்த பிரான்ஸ் வீரருக்கான பரிசை பெற்று கொண்டார்.
தென் அமெரிக்காவில் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்ற வரிசையில் 2010-ல் மூன்றாவதாக இடம் பிடித்த நெய்மர் 2011-ல் தமது 19வது வயதிலேயே முதலிடத்தைப் பிடித்தார்.
மீண்டும் 2012-ம் ஆண்டிலும் இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2011ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா பாலோன் தி’ஓர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நெய்மார் பத்தாவது இடத்தில் வந்தார். அந்த ஆண்டின் சிறந்த கோலுக்கு வழங்கப்படும் ஃபிஃபா புசுகாசு விருதினைப் பெற்றார்.
இவரது ரசிகர்கள் இவரது திறமையை பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பெலேயுடன் ஒப்பிடுகின்றனர். இவரை “ஒரு சிறந்த விளையாட்டாளர்” என பெலேவும் “உலகின் மிகச்சிறந்த வீராராக வருவார்” என ரொனால்டினோவும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



