கடந்த 2014ம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நியூசிலாந்து குத்துச்சண்டை வீரர் டேவிட் நிக்க-வின் தங்கப்பதக்கம் கடந்த மாதம் காணமல் போயுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
ஆக்லாந்தில் தனது காரில் வைக்கப்பட்டிருந்த தங்கப்பதக்கம் திருடு போயுள்ளது என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நிக்க, ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



