
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை பூதாகரமாக்கிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு கவர்னர் பதவி! மோடி அரசு.!
மோடி தலைமையிலான பாஜக அரசு, கேரளா உள்பட தென்மாநிலங்களில் காலூன்ற கடும் முயற்சிகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் பாஜகவுக்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் கேரளாவிலும் பாஜக நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையில், கேரளாவில் பாஜகவின் எதிர்காலம் வளா்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மிசோரம் மாநில கவர்னர் பதவி வழங்கி உள்ளது
மோடி அரசு. ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு தெலுங்கானா மாநில கவர்னர் பதவி வழங்கியதைத் தொடர்ந்து தற்போது கேரள மாநிலத் தலைவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீதரன்பிள்ளை, சபரிமலை விவகாரத்தில், மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை கையில் எடுத்து, நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக உள்ள ஸ்ரீதரன் பிள்ளை கோழிக்கோடு அருகே உள்ள வெண்மணி பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் பிள்ளைக்கு ரீத்தா என்ற மனைவி உள்ளார்.
இவர் பாரதிய ஜனதா தலைவராக பதவி ஏற்றபிறகு தான் கேரளாவில் புயலை கிளப்பிய சபரிமலை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி கட்சி மேலிடத்தின் பாராட்டை ஸ்ரீதரன்பிள்ளை பெற்றார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.
இதற்கு பலனாகத்தான் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கவர்னர் பதவி குறித்து கூறிய ஸ்ரீதரன்பிள்ளை, பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் செல்வாக்கு பெற நான் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டேன்.
எனக்கு எந்த பொறுப்பு வழங்கப்பட்டாலும் அதை நிறைவேற்றுவது எனது கடமை ஆகும் என்றார்.