இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். போரிஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் மற்றும் அலோக் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரீத்தி பட்டேலுக்கு மிக முக்கியத்துறையான உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் எப்போதும் தன்னை இந்தியாவின் மருமகன் என்று கூறிக் கொள்வது வழக்கம். ஜான்சனின் முன்னாள் மனைவி மரினா வீலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வழக்கறிஞராக பணியாற்றி வரும் மரினாவும், போரிஸ் ஜான்சனும் கடந்த 1993ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் மணமுறிவு செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



