அநியாயம் செய்பவர்களை இறைவன் ஏன் உடனே தண்டிபப்பது இல்லை ? சில சமயம் பிறரைத் துன்புறுத்துவார்கள் பல ஆண்டுகள் நன்றாகவே வாழ்கிறார்களே.?
இந்த கேள்விக்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட மகாஸ்வாமிகள் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் அருளிய அநியாயம் செய்பவர்களை இறைவன் தண்டிப்பது இல்லையா என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.
எப்போது அவனுடைய கர்மாவின் பலன்களை அனுபவிக்கும் நிலை வருகிறதோ அப்போது அவன் அடியோடு நாசம் அடைந்து விடுகிறான். எப்போது அந்த சமயம் வரும்? முன்று வருடங்களிலோ முன்று மாதங்களிலோ முன்று பட்சங்களிலோ , முன்று நாட்களிலோ அப்படி தண்டனையை தீச்செயல்களுக்காக அனுபவிக்க நேரிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாம் உலகத்தில் பார்க்கிறோம் . கிரிமினல் வழக்குகள் என்பதும் சிவில் வழக்குகள் என்பதும் நீதிமன்றங்களுக்கு வருகின்றன. ஒரு சிவில் வழக்கு என்பது இருபது வருடங்கள் வரையில் கூட முடிவடையாமல் இருக்கலாம்.ஆனால் ஒரு கிரிமினல் வழக்கு அதைக் காட்டிலும் சீக்கிரம் முடிவடைகிறது . சுமார் ஆறு மாதங்களிலேயே குற்றவாளி பலனை அனுபவிக்க நேரிடலாம். இந்த வித்தியாசம் ஏன்? கிரிமினல் வழக்குகளுக்கு உடனே தண்டனை அளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.சிவில் வழக்குகளுக்கு அப்படி இல்லை.
நாம் செய்யும் கர்மாவிற்கு ஏதாவது ஒரு காலத்தில் பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தான் எத்தனை வயதானாலும் ஒருவன் அனைத்து முயர்சிகளுடனும் அறிவைப் பெற முயற்சிக்க வேண்டும்.அது இப்போது பலன் அளிக்காவிட்டாலும் மற்றோரு பிறவியில் ( அறிவு) பெற எளிதாக இருக்கும். என்று கூறியுள்ளார்.அப்படி வயதானாலும் கல்வியைக் கற்றுக் கொள் என்றார். இப்பிறவியில் படிப்புக்கு பலன் கிடைக்காமல் போனாலும் அந்த முயற்சி வீணாகாது. அடுத்தப் பிறவியில் நாம் எளிதாக அக்கல்வியைக் கற்றுக் கொள்ளலாம்.
இதெல்லாம் எதை தெரிவிக்கிறது ? நாம் செய்த கர்மா விற்கும் அவசியமாக பலன் உண்டு.இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் அடுத்த பிறவியில் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.இன்பத்தை விரும்பினால் நாம் தர்மத்தை செய்ய வேண்டும்.நாம் இப்போது அதர்மத்தை செய்து விட்டால் பிறகு துன்பம் தான் வரும்.