bhopal 0 - 2026

சரியாக 35 ஆண்டுகளுக்கு முன் 1984 டிசம்பர் 2ஆம் தேதி மத்திய பிரதேஷ் போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து விஷவாயு மீதைல் ஐசோ சயனைடு கசிந்து ஆயிரக்கணக்கில் மக்களை ஒரே நிமிடத்தில் கொன்று குவித்தது.

அந்த கோர விபத்தை நினைவுகூரும் விதமாக டிசம்பர்-2ஆம் தேதியை மாசுக் கட்டுபாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது.

1984 டிசம்பர் 2ஆம் நாள் நள்ளிரவில் போபால் நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது 41 டன் மீதைல் ஐசோ சயனைடு என்ற விஷ வாயு கசிந்ததால் ஒரே நிமிடத்தில் 2,259 பேர் ஒன்றும் அறியாத பொது மக்கள் இறந்தனர். அடுத்த 72 மணி நேரத்தில் 3,487 பேர் உயிரிழந்தனர்.

இந்த பேரிடரால் 8 லிருந்து 10 ஆயிரம் பேர்… மொத்தமாக 25 ஆயிரம் பேர் இந்த வாயுக் கசிவினால் ஏற்பட்ட மாற்றத்தால் மரணித்ததாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்தது.

அதுமட்டுமன்றி மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் மேலாக மக்கள் இந்த பேராபத்தில் ஏற்பட்ட உடல்நலக் கேடினால் அவதிப்பட்டனர் . இது உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை மாசுக் கொடுமை விபத்து .

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

ஆனால் இந்த ஆபத்து பற்றி உலக நாடுகளுக்கு விழிப்பு ஏற்பட்டாலும் நம் நாட்டில் இன்னும் விழிப்பு உணர்வு ஏற்படவில்லை. எத்தனையோ சுற்றுச்சூழல் சட்டங்கள் இருந்தாலும் அவற்றை சரிவர அமல்படுத்துவது இல்லை. மாசுக் கட்டுப்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பை அளிக்கிறது.

இது குறித்து பொது மக்களும் அரசும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி தீவிர நடவடிக்கை எடுத்தால் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending