
மதுரை: தமிழகத்தில் நகர, ஊரக மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பேசினார்.
மதுரை அருகே திருமங்கலத்தில், கொரோனா சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்களுக்கு பல்வேறு கடன்களை வழங்கி அவர் பேசியது:
மதுரை மாவட்டத்துக்கு, மகளிர் மேம்பாட்டுக்காக, ரூ. 10 கோடி நிதியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். இத் தொகையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் மளிகை கடை வைத்தல், கறவை மாடு வளர்த்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாவு கடை வைத்தல் போன்ற தொழில்களுக்கு கடன் உதவி செய்வதின் மூலம், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மகளிர் குழு மேம்படுத்தினார்.
மகளிருக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தவரே அவர். திருமங்கலத்தில் தொழில் வளர்ச்சி மேம்படைய, அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி:ரவிச்சந்திரன், மதுரை