sat jub sun - 2026

சூரிய குடும்பத்தின் இரண்டு பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி (Jupiter and Saturn) ஆகியவற்றால் சந்திரன் சூழ்ந்திருந்தது சனிக்கிழமை இரவு வானத்தில் மக்களுக்கு காட்சி விருந்தாக அமைந்தது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் சனி கிரகம் பிரகாசமாக இருக்கும். குறிப்பாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதன் ஒளிர்வு உச்சத்தில் இருக்கும். அதற்கு காரணம் அது சூரியனுக்கு நேர்மாறாக இருக்கும் என்பதுதான். பூமி சூரியனுக்கும் சனிக்கும் இடையில் இருப்பதால், சனி பூமிக்கு மிக அருகில் இருந்து இரவு முழுவதும் பிரகாசமாக தெரியும்.

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி பிரிவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 2 அன்று மூன்று நிமிட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில், இந்த மாதம் வானத்தில் ஒருவர் காணக்கூடிய அதிசயமான விஷயங்கள் விளக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1 சனிக்கிழமையன்று, வியாழன் மற்றும் சனி கிரகங்கள் சந்திரனுக்கு மிக அருகில் தோன்றியதாக நாசா தெரிவித்துள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பின் மிகத் தெளிவாக இந்த மூன்றையும் உலகின் பல இடங்களில் மக்களால் காண முடிந்தது.

இந்த நிகழ்வைக் கண்டவர்களில் சிலர் அதன் படங்களை எடுத்து டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending