விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததால்… விவாகரத்து பெற்றேன்: சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர்!

madurai
madurai

அங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி

அங்கொடா லொக்கா மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்று வழக்கில் தொடர்புடைய சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத் குமார் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்..

இலங்கை நிழலுலக தாதா அங்கொடா லொக்கா மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் தங்கியதாக கூறப்படும் ரயிலார் நகர் கூடல் நகர் பகுதிகளில் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று மதுரை சொக்கி குளத்தில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய நபர்களுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜரானார் இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத்குமார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2006 ஆம் ஆண்டு சிவகாம சுந்தரிக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றது எனவும் அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்ததாகவும் பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறினார். அதற்கான காரணங்களில் ஒன்றாக, சிவகாமசுந்தரி குடும்பத்தாருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருந்தது தனக்கு பிடிக்கவில்லை என குறிப்பிட்டார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
madurai-police-crime-branch
madurai-police-crime-branch

தற்போதைய அங்கொடா லொக்கா வழக்கு விவகாரத்தில் எந்த விஷயமும் தனக்கு தெரியாது என்றும் தனது முன்னாள் மனைவி சிவகாம சுந்தரியுடன் முன்பே மணவிலக்கு ஏற்பட்டுவிட்டது என்றும், அதற்குப் பிறகு அவருடன் எந்தவித தொடர்பிலும் தான் இல்லை என்பதை சிபிசிஐடி விசாரணையில் தெளிவாகக் கூறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கும் தனது முன்னாள் மனைவி சிவகாம சுந்தரிக்கும் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காதல் மலர்ந்து திருமணம் புரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்ட வினோத்குமார், திருமணத்துக்குப் பின்னர் இவர்களது குடும்பத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதை தாம் அறிந்தததாகவும், அதனை பலமுறை கண்டித்ததாகவும் ஒரு கட்டத்திற்குப் பிறகு தாம் அதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே வழக்கறிஞர் சிவகாம சுந்தரியின் பெற்றோர் பாண்டியம்மாள் மற்றும் தினகரன் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories