அமித்ஷா ஆஸ்பத்ரியிலிருந்து அலுவல்களை கவனிப்பார்: உள்துறை அமைச்சக அதிகாரி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
amith sha
file pic

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் என்று உள்துறை அமைச்சகம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடத்த 2 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பல அரசியல் தலைவர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். விரைவில் மீண்டு வர வாழ்த்தையும் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, அமித்ஷா, அவரது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் மருத்துவர்கள் ஆலோசனையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் என்று உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அமித்ஷா நலமுடன் உள்ளார் என்றும் ஓய்வும், சிறப்பு கவனிப்பும் தேவைப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.