south-zone-murugan-ig

தென் மண்டல காவல்துறைத் தலைவர் முனைவர் சி.முருகன் இ.கா.ப., தென்மண்டல காவலர்கள் அனைவருக்கும் அவரவர் பிறந்தநாள் அன்று அவரவர்க்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

தென் மண்டலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை அலுவலர் மற்றும் காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை அளிக்கப் படும். பிறந்த நாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல் நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்…

இவ்வாறு தென் மண்டல காவல்துறைத் தலைவர்
முனைவர் சி.முருகன் இ.கா.ப. அறிவித்துள்ளார்.

south-zone-police

இந்த அறிவிப்பின்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், மாவட்ட காவல் அலுவலர் மற்றும் காவலர்களுக்கு அவரவர் பிறந்த நாள் அன்று விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending