திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்!

Published:

ops-srivilliputhur
ops-srivilliputhur

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார்.

ops-srivilliputhur1
ops-srivilliputhur1

முன்னதாக மதுரையிலிருந்து வந்த துணை முதலமைச்சருக்கு அதிமுக கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். ஓபிஎஸ் வருகையையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தரிசனம் முடித்தபின் கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றார்.

ops-srivilliputhur2
ops-srivilliputhur2

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட துணை முதலமைச்சர், திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள செண்பகத்தோப்பில் உள்ள குல தெய்வக் கோவிலில், குலதெய்வம் வனப் பேச்சியம்மனை வணங்கினார். பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

ops-srivilliputhur4
ops-srivilliputhur4

குலதெய்வக் கோவிலில் துணை முதல்வர் சுவாமி தரிசனம் செய்தபின் அங்கிருந்து புறப்பட்டு செனறார். துணை முதல்வருடன் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

ops-srivilliputhur3
ops-srivilliputhur3
  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Related articles

Recent articles

spot_img