drawing
drawing

3000 ஆண்டு கால பழமையான பாறை ஓவியங்களை கண்டுபிடித்ததால் பல்வேறு வரலாற்று சின்னங்களை மீட்டெடுக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள வகுரணி மொட்டமலை பகுதியில் புலிப்புடவு குகை அமைந்துள்ளது. அங்கிருந்த பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஓவியங்கள் 3000 ஆண்டு கால பழமையானது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அபூர்வமாக கிடைக்கும் பெண் ஓவியங்கள், சிவப்பு நிறத்தில் புலி உருவம், புள்ளிகளால் ஆன மனித ஓவியம் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் இந்த குகையில் வரையப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறும்போது பாறையில் இருக்கும் குறியீடுகள் தமிழி எழுத்துக்களுக்கு முற்பட்ட குறியீடுகளாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் பல்வேறு வகையான பாறை ஓவியங்கள், புலிக்குத்தி கல் மற்றும் தமிழ் எழுத்துக்கள் நிறைந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

மேலும் இப்பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்றுகளை மீட்டெடுக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending