amrinder singh - 2026

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஏ.ஏ.பி) இடையே கூட்டணி தேவைப்படவில்லை என்று மாநில முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் திங்கள்கிழமை இன்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தில்லியில் சந்தித்துப் பேசினார் அம்ரீந்தர் சிங். அதன் பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியபோது, “பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி என்பது துளியும் இல்லை. அவர்களை இங்கே தேடவேண்டும். ஆம் ஆத்மியால் எந்த விளைவும் இங்கே ஏற்படாது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து விட்டது.

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில், சிறந்த மற்றும் மிகவும் வென்றவர் என்ற அடிப்படையில், வேட்பாளர் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து 13 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பஞ்சாபில், அமைச்சரவையை மாற்றியமைக்க சாத்தியம் உள்ளது. நவ்ஜோத் சிங் சித்து மாநிலத்தின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending