dallars - 2026நம்மூர்ல பருவ மழை கூட பொய்த்துவிட்டது  ஆனால் அமெரிக்காவில் பணமழை பெய்துள்ளது.

ஜார்ஜியாவில் ஒரு நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரியின் திறந்திருந்த கதவுகள் வழியாக பண மழை கொட்டியது.

இதை அப்பகுதி வழியாக வாகனம் ஓட்டி வருவோரும், போவோரும்  ஆச்சரியமுடன் பார்த்தனர். இந்த பண மழையை லாரி டிரைவர் கவனிக்காததால் அந்த பணத்தை எடுக்க மக்கள் விரும்பினர்.traffic 1 - 2026சாலை வழியாக 10-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்தவர்கள் பணத்தை எடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

டன்வூட்டி போலீஸாருக்கு 911 பேர் போன் செய்து போக்குவரத்து நெரிசல் குறித்தும் கார்கள் வரிசையாக நிற்பது குறித்தும் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், லாரியின் பக்கவாட்டு கதவு திறந்திருந்ததால் அதில் இருந்த 1.75 லட்சம் டாலர்கள் சாலையில் பறந்தன.

நாங்கள் சென்ற பிறகு, அங்கிருந்த சில நூறு டாலர்களை நாங்களும், லாரியில் இருந்த டிரைவரும் மீட்டோம். ஏராளமான பணத்தை மக்கள் எடுத்துச் சென்று விட்டனர். அந்த பணத்தை திருப்பித் தருமாறு மக்களிடம் கேட்டு கொண்டுதான் இருக்கிறோம்.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

அந்த பணம் அதுவாகவே பறந்து வந்திருந்தாலும், மற்றவர்களுடையது என்பதால் அதுவும் ஒரு திருட்டுதான்  பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். உயிரை பணயம் வைத்து இந்த பணத்தை வாகன ஓட்டிகள் எடுத்ததால், வாகன விபத்தோ பாதசாரிகளுக்கு பாதிப்போ ஏதும் ஏற்படவில்லை என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending