December 8, 2024, 8:38 PM
27.5 C
Chennai

இது ஒரு சிறந்த அஸ்திரம்…! பிரயோகித்துப் பாருங்கள்…!

மத மாற்றம் குறித்து கவலைப்படுபவர்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்றுண்டு. செய்தி அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்கள் பகுதி / மாவட்டம் / மாநிலம் தொடர்பான உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் அம்சங்களின் மேல் விவரங்கள் வேண்டும் என்று ஆர்டிஐ அதிகாரியைக் கேளுங்கள்…!

கிடைக்கும்…! வந்தபின் கிளர்ந்தெழுங்கள்…! எவ்வாறு…?

பாரத தேசத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பலவித வேலை நிமித்தமாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக பாரத அரசாங்கம் பல விதமான விசாக்களை விநியோகித்து வருகிறது. அதே போல் பல மேல்நாட்டு கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வந்து இங்கு மத மாற்றங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் சாதாரணமாக டூரிஸ்ட் விசா அல்லது மிஷனரி விசாக்களில் வருகிறவர்களே!

உண்மையில் 2011 வரை பாரத உள்துறை அமைச்சகத்தின் அதிகார வெப்சைட்டில் விசா தொடர்பான செய்திகளே இருந்ததில்லை. டூரிஸ்ட் விசாவில் வந்த வெளிநாட்டார் நம் நாட்டில் மதப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விஷயம் யாருக்கும் அவ்வளவாக தெரியாது.

யாரேனும் வெளிநாட்டு பாஸ்டர் இங்கு ஏதாவது மதத் தொடர்பான சபையில் பிரசங்கம் செய்வதற்கு வந்தால், தகுந்த ஆதாரங்களோடு காவல்துறையில் புகார் செய்தாலும் கூட, சட்டம் பற்றிய சரியான புரிதல் இன்றியும் அலட்சியத்தாலும் புகாரை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மேலும், “அப்படி மதப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எங்கே உள்ளது?” என்று எதிர்க் கேள்வி கேட்பார்கள். உண்மைதான்! அவ்வாறு செய்யக்கூடாதென்று எங்கே உள்ளது? இது குறித்தான தெளிவை யார் அளிப்பார்கள்?

இதற்காக 2011 ல் பாரத உள்துறை அலுவலகத்திற்கு செய்தி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தேன். டூரிஸ்ட் விசாவின் கீழ் பாரத தேசத்திற்கு வரும் வெளிநாட்டினர் இங்கு மதத் தொடர்பான செயல்களில் பங்கு கொள்ளலாமா? என்று ஒரு கேள்வியை அதில் கேட்டிருந்தேன்.

உடனே அங்கிருந்து பதில் வந்தது. “டூரிஸ்ட் விசாவில் பாரத தேசம் வரும் வெளிநாட்டவர் எப்படிப்பட்ட மதத் தொடர்பான சபைகளிலும் பங்கு பெறக் கூடாது. அது குற்றம்!” என்று பதில் வந்தது. உடனே அதன் காப்பிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி ரெபெரன்ஸ் ஆக பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டேன்.

மிஷனரி விசா என்றால் என்ன?

பாரத தேசத்தில் மதம் தொடர்பான விஷயங்களில் பங்குகொள்ளும் வெளிநாட்டார் மிஷனரி விசா பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு தவறான அபிப்பிராயம் இப்போதும் பெரும்பான்மையோரிடம் உள்ளது. இதன் மீது யாருக்கும் தெளிவான புரிதல் இல்லை. இதற்குக் காரணம் அப்போதைய அரசாங்கங்களின் வழிமுறைகளே!

ஆனால் இப்போது கேள்வி கேட்பதற்கு செய்தி உரிமைச் சட்டம் வந்துவிட்டது. இதன் மூலம் 2011ஆம் ஆண்டு பாரத உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினேன். மிஷனரி விசா என்றால் என்ன? மிஷனரி விசா பெற்றுள்ள வெளிநாட்டார் பாரத தேசத்தில் மதத் தொடர்பான செயல்களை நடத்தலாமா? மிஷனரி விசா உள்ள வெளிநாட்டார் செய்யக்கூடியவை எவை? செய்யக்கூடாதவை எவை? என்று கேட்டிருந்தேன்.

ALSO READ:  ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஊழல் பேர்வழி!

அதற்கு உடனே அங்கிருந்த பதில் வந்தது. இத்தனை காலமாக மிஷனரி விசா என்பது மதத் தொடர்பான செயல்களுக்கானது என்ற தவறான அபிப்பிராயத்திற்கு அந்த பதில் முடிவு கட்டியது. மதத் தொடர்பான செயல்களுக்காக பாரத தேசத்திற்கு வர விரும்பும் வெளிநாட்டாருக்கு பாரத அரசாங்கம் எப்படிப்பட்ட விசாவும் அளிக்காது. மிஷனரி விசா என்பது மதத் தொடர்பற்ற சேவை காரியங்களில் பங்கு பெறுவதற்காக இங்கு வரும் வெளிநாட்டவருக்கு அளிக்கப்படுவது என்று பதில் வந்தது.

அது மட்டுமன்றி மிஷனரி விசா பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் போதுமான அளவு பொருளாதார வசதி பெற்றிருக்க வேண்டும். பாரத தேசத்திற்கு வருபவர் சந்தேகத்திற்கு இடமான மனிதனாக இருக்க கூடாது (persona – non – grata) என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அது மட்டுமின்றி மிஷனரி விசாவின் மேல் பாரதம் வந்தவர்கள் ஹரிஜனங்கள் வசிக்கும் பிரதேசங்களில் வேலை செய்யக்கூடாது என்றும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் (மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து தவிர) மற்றும் நக்சலைட்டு, மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பிரதேசங்களில் வேலை செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் 1999இல் ஒடிசாவில் கொலைக்காளான கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பிரச்சாரகரின் கதையை நினைவு படுத்திக் கொள்வது சரியாக இருக்கும். அவர் சுமார் 40 ஆண்டு காலம் தன் மனைவியோடு சேர்ந்து ஒடிசாவில் ஹரிஜன பிரதேசங்களில் இருப்பிடம் அமைத்துக் கொண்டு குஷ்ட ரோகிகளுக்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு பலரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி வந்தார்.

அண்மையில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ள செய்தியைப் பரிசீலித்தால் கிரஹாம் ஸ்டெயின்ஸ் செய்த விசா மோசடி குற்றத்தை இத்தனை காலம் அப்போதிருந்த அரசாங்கங்கள் ஏன்? எவ்வாறு? கண்டு கொள்ளாமல் விட்டன என்ற கேள்வி எழுகிறது.

இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் 2005-ஆம் ஆண்டில் அப்போதைய யுபிஏ அரசாங்கம் க்ரஹாம் ஸ்டெயின்ஸ் மனைவிக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது.

போலி எஸ்ஸி ஜாதி நிரூபண சான்றிதழின் மீது போராட்டம்:-

ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய எஸ்சி குலத்தவர்கள் அப்போது வரை இருந்த ரிசர்வேஷன் சலுகைகளை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்கள். ஆனால் நிறைய பேர் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னும் எஸ்சி ரிசர்வேஷன் சலுகைகளை அக்கிரமமாக அனுபவித்து வருகிறார்கள்.

உதாரணத்திற்கு அதிலாபாத் மாவட்டம் தண்டேபல்லி மண்டலம் ரெப்பனப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த கருணாகர் என்பவரோடு 2016 ஜூன் 26ஆம் தேதி திருமணம் நடந்தது. தம்பதிகள் இருவரும் கிறிஸ்தவர்களே! முன்பு ஸ்வப்னா எஸ்ஸி யைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தார். திருமணம் கூட கிறிஸ்தவ சம்பிரதாயப்படி சர்ச்சில் நடந்தது.

ALSO READ:  சீனாவை அழ வைத்த தங்கத் தமிழர்!

2016 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநில அரசின் திட்டமான ‘கல்யாணலட்சுமி’ யின் கீழ் பொருளாதார உதவி பெற்றவர்களின் விவரங்களை கேட்டு மண்டல ரெவின்யூ அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்தோம். அதற்கு பதிலாக ரெவின்யூ அதிகாரிகள் அளித்த பயனாளிகள் பெயர் விவரத்தில் ஸ்வப்னாவின் பெயரும் இருந்தது.

ஹிந்துக்களை மட்டுமே உத்தேத்து வழங்கப்படும் இந்த திட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு பொருளாதார உதவி எவ்வாறு சென்றது? என்று மற்றும் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அவசரஅவசரமாக அதிகாரிகள் அந்த தம்பதிகளின் எஸ்சி சர்டிபிகேட்டுகளை ரத்து செய்து அவர்களுக்கு பிஸி –ஸி சர்டிபிகேட்டுகளை அளித்தது. இதன் மூலம் உண்மையான ஹிந்து எஸ்ஸி க்களின் ரிசர்வேஷன் உரிமைகள் காப்பாற்றப்பட்டன.

அக்கிரம சர்ச் விவகாரம் பகிரங்கமானது:-

எங்காவது ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்றால் அதற்கு பல முன்அனுமதிகள் தேவைப்படுகின்றன. கட்டப்பட வேண்டிய சர்ச்சுக்காக ஒரு நிர்வாக கமிட்டியை அமைக்க வேண்டும். அதில் பஞ்சாயத்து அதிகாரி, (முனிசிபாலிடியாக இருந்தால் கமிஷனர்), சர்ச் பாஸ்டர், மற்றும் ஒரு அரசாங்க அதிகாரி உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அந்த சர்ச் கட்டப்படும் இடம் சர்ச்சின் பெயரில் ரிஜிஸ்டர் ஆக வேண்டும். அந்த சர்ச் ஒரு சொசைட்டியாக ரிஜிஸ்டர் செய்யப்படவேண்டும். தங்களுக்கு வெளிநாட்டுப் பண உதவி வரவில்லை என்று ஒரு டிக்ளரேஷன் சமர்ப்பிக்கவேண்டும். கட்ட நினைத்த சர்ச்சின் பிளானை சர்வேயர் மூலம் தயார் செய்ய வேண்டும். அதற்கு முனிசிபல் இன்ஜினியர் ஒப்புதல் அளிக்க வேண்டும்,

இதெல்லாம் ஆனபின்பு உண்மையில் அந்த கிராமம் முழுவதும் உள்ள மக்கள் தொகை எத்தனை? அதில் கிறிஸ்தவர்கள் எத்தனை பேர்? அந்த கிராமத்தில் இதுவரையில் கட்டப்பட்டிருக்கும் பிற சர்ச்சுகள் எத்தனை? இந்த விவரங்களை எல்லாம் தெரிவித்து மேலே குறிப்பிட்ட டாக்குமெண்ட்கள் எல்லாம் சேர்த்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவை எல்லாம் முடிந்தபின் சுற்றுப்புற மக்களிடமிருந்து நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்க வேண்டும். யாரேனும் ஒருவர் மறுப்பு தெரிவித்தாலும் சர்ச் கட்ட முடியாது.

இத்தனை கடுமையான நிபந்தனைகள் உள்ளதென்று தெரிந்த பின் இப்போது உள்ள சர்ச்சுகளுக்கு உண்மையாகவே அரசாங்க அனுமதி உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

இதனை தெளிவு படுத்திக் கொள்வதற்கு ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா ஜில்லா ‘ரெட்டிகூடம்’ மண்டலம் ‘மத்துலபர்வா’ கிராமத்தில் அனுமதி பெற்ற சர்ச்சுகளின் எண்ணிக்கை, அவற்றின் விவரம், அங்கிருக்கும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, எஸ்சி குலத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களில் எத்தனை பேருக்கு பிசி-சி சர்டிபிகேட் அளிக்கப்பட்டது போன்ற கேள்விகளோடு மண்டல அலுவலகத்துக்கு செய்தி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்பினோம்.

ALSO READ:  ஹரியானா: பெண்களுக்குப் பண வாக்குறுதி!

அதிகாரிகளிடமிருந்து மிக அதிர்ச்சி அளிக்கும் பதில் வந்தது. அவர்கள் அளித்த செய்தியின்படி அந்த கிராமத்தில் அதிகாரபூர்வமாக உள்ள சர்ச்சுகளின் எண்ணிக்கை பதினொன்று. மேலும் அங்கு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஜீரோ.

பின் யாருக்காக அத்தனை சர்ச்சுகளைக் கட்டியுள்ளார்கள்? அங்கு ஹிந்துக்களை சட்டத்திற்குப் புறம்பாகவும், அரசுக்கு புறம்பாகவும் மதம் மாற்றுவதற்காகவே கிறிஸ்தவர்கள் யாரும் இல்லாத இடத்தில் இத்தனை சர்ச்சுகளை கட்டி உள்ளார்கள் என்பது தெளிவானது.

கிறிஸ்தவர்கள் பலர் இருக்கும் இடத்தில் தமது வழிபாட்டுத் தேவைகளுக்காக சர்ச்சு கட்டினார்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கும். யாருமேயில்லாத இடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பதினோரு சர்ச்சுகளைக் கட்டியுள்ளார்கள் என்றால் யார்? எதற்கு கட்டினார்கள்? அதற்குத் தேவையான பணம் எங்கிருந்து வந்தது? அந்தத் தொகையை ஒரு முதலீடாக போட்டு மேலும் கொள்ளையடிப்பதற்குத்தானே இவ்வாறு செய்துள்ளார்கள்? அல்லது சில மக்கள் எதிர்ப்பு சக்திகள் இத்தனை பெரிய தொகையை முதலீடு செய்துள்ளதா? போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.

இவ்விதம் செய்தி உரிமை சட்டத்தின் மூலம் பலவித செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும். அதனை ஆதாரமாகக் கொண்டு அதிகாரிகளை கேள்வி கேட்க முடியும்.

இதன் மூலம் இதுவரை இஷ்டம்போல் மிஷனரிகள் செய்துவந்த மதம் மாற்றும் செயல்களுக்கு அணை போட முடியும்.

அதேபோல் மதமாற்றங்களால் எஸ்சி, எஸ்டி வர்க்கங்களுக்கு நடக்கும் அநியாயங்களைக் கூட நிறுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஹிந்து மதக் கலாசாரங்களை வெளிநாட்டு மதங்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.

தெலுங்கில் – ஏ. எஸ். சந்தோஷ்,
(தலைவர், லீகல் ரைட்ஸ் ப்ரொடெக்ஷன் ஃபோரம்)

தமிழில் – ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிகை 2019)

author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari