Asmkan - 2026

மக்களவை துணை சபாநாயகர் ரமா தேவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஆசம் கான் மக்களவையில் மன்னிப்பு கோரினார்

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தின் போது பாரதீய ஜனதா உறுப்பினர் ரமா தேவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது ரமாதேவி குறித்து ஆசம் கான் ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளை கூறினார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆசம் கான் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் ஆசம் கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவையில் ஆசம் கான் செய்த தவறை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் கடும் தண்டனை வழங்க சபாநாயகர் உத்தரவிட தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் பாரதீய ஜனதா பெண் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

அவையில், திங்கள் கிழமை ஆசம் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை மக்களவை கூடியதும், ஆசம் கான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending