“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”

“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
 
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”
 
(“நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்” என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)
 
 
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா12705540 1113504875361343 8388843943677516806 n - Dhinasari Tamil
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
 
அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை – தசரத மகாராஜாவுக்கு வந்த மாதிரியான குறை.
 
குழந்தைப் பேறு இல்லை.
 
 
ராமேஸ்வரத்தில் திலஹோமம்,நாக பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி – எல்லாம் பண்ணியாகி விட்டது. பலன் ஏனோ நெருங்கி வரவில்லை . வேறு என்ன தான் செய்ய? பெரியவாளிடம் வந்தார்கள்.
 
 
வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; “எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே
இந்தத் தம்பதிக்கு”என்று பெரியவாளிடம் சொன்னார்.
 
 
பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.
 
 
“ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?”
 
 
“ஆமாம்….” என்றார் வித்யார்த்தி.
 
 
“நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு. பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா, நேர்வகிடு – ஸீமந்தம் – இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”
 
 
அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.
 
 
அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.
 
 
“நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்” என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,142FansLike
376FollowersFollow
66FollowersFollow
0FollowersFollow
2,831FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-