“பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்” என்று சொல்லி விட்டார்கள் டாக்டர்கள்”-பெரியவாளிடம் ஒரு பக்தை.
.”எதுவுமே பேசாமல் தன் கழுத்தைத் தடவிக் கொண்டே உள்ளே போய்விட்டார்”.-காஷ்ட மௌனத்தில் இருந்த பெரியவா.
.சொன்னவர்; கே.ஜெயலக்ஷ்மி அம்மாள்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.என் நாத்தனார் பிள்ளைக்கு திடீரென்று கழுத்தில் ஒரு வீக்கம்,வலி என்றால் அப்படி ஒரு வலி. “கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம்,உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்” என்று சொல்லி விட்டார்கள் டாக்டர்கள்.
என் நாத்தனாருக்கு வயிற்றைக் கலக்கியது, பணச் சிலவு,ஆஸ்பத்திரி வாசம் என்பது ஒரு புறமிருக்க டாக்டர்களின் பேச்சும் உற்சாகமளிப்பதாக இல்லை.
“மன்னிக்கு காஞ்சிபுரம் சங்கராசாரியாரிடம் ரொம்ப பக்தி உண்டே…அடிக்கடி ஓடிப்போய் சேவித்துவிட்டு வருவாள். அவரிடம் என்ன தெய்வீக சக்தி இருக்கோ தெரியவில்லை.நாமும்தான் போய்ப் பார்த்துட்டு வருவோமே….!”
அவர்கள் காஞ்சிபுரம் சென்ற நாளில் பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டார்கள். மௌனமாயிற்றே, பதில் சொல்லவில்லை. எதுவுமே பேசாமல் தன் கழுத்தைத் தடவிக்கொண்டே உள்ளே போய் விட்டாராம்.
என் நாத்தனாருக்கு மிகவும் ஏமாற்றம். “பெரியவாளைப் பற்றி கூடை,கூடையாகச் சொல்வாளே மன்னி…..இப்படி ஜாடை கூடக் காட்டாமல் போயிட்டாரே” என்று ஏக்கம்.நாளைக்கு ஆபரேஷன்.
“தொண்டை என்னவோ போலிருக்கு, அம்மா…” என்று பையன் சொன்னதைக் கேட்டதுமே என் நாத்தனார் கதி கலங்கிப் போய்விட்டார்.
“கண்ணா…..கண்ணா…..என்னடா ஆச்சு…?”
வாந்தி ஆச்சு!
தேங்காய் ஓட்டின் ஒரு சில்லு வெளியே வந்து விழுந்தது. பையன் நிம்மதியாகி, “சரியாய் போச்சு” என்றான்.
மறுநாள் குறித்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். டாக்டர், பையனின் கழுத்தில் கையை வைத்து அழுத்தினார்.
“வலிக்கிறதா?”
“இல்லை…”
“ஆபரேஷன் தேவையில்லை…”
என் நாத்தனாருக்கு உடலில் புல்லரித்தது.
பெரியவாளின் தீவிர பக்த குடும்பங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது.
பிள்ளைக்கு கழுத்து நரம்பில் ப்ராப்ளம், உடனே ஆபரேஷன் செய்யணுமாம்!- பெரியவாளிடம் புலம்பிய பக்தை!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari