December 6, 2021, 7:51 pm
More

  மகாபெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே சிராத்தம் செய்தார்!

  “கஜேந்திர மோட்ச ஸ்தலம்’-தெரியுமா”

  (காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே . சிராத்தம் செய்தார்)

  மஹாளயத்தின் சிறப்பு- தினமணி கட்டுரையில் ஒரு பகுதி என். பாலசுப்ரமணியன்

  மஹாளயத்தின் சிறப்பு.

  மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்: பிரதமை – பணம் சேரும். துவிதியை – நல்ல குழந்தைகள். திரிதியை – நினைத்தது நிறைவேறும். சதுர்த்தி } பகை அழியும். பஞ்சமி – செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். சஷ்டி – புகழ் கிடைக்கும். சப்தமி – சிறந்த பதவிகள் கிடைக்கும். அஷ்டமி } கஷ்டங்கள் நீங்கும். அறிவாற்றல் கிடைக்கும். நவமி – திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பெருகும். தசமி – நீண்டநாள் ஆசை நிறைவேறும். எல்லா விருப்பங்களும் நிறைவேறும். ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி. துவாதசி – ஆடை ஆபரண சேர்க்கை. திரயோதசி – சுதந்திரமான வேலை அல்லது தொழில். சதுர்த்தசி – ஆயுள் ஆரோக்யம் விருத்தியாகும், பாவம் நீங்குதல், மஹாளய அமாவாசை – மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.

  இந்த மஹாளய அமாவாசை தினத்தில் புண்ணிய நதிகள், சேது, ராமேஸ்வரம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திலதர்பணபுரி போன்ற புண்ணிய திருத்தலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது, கும்பகோணத்திற்கருகில் கோவிந்தபுரத்தில் உள்ள ராம தீர்த்தம், உத்திரவாகினியாக நதி ஓடும் இடங்கள், மேற்கே துவங்கி கிழக்கு முகமாக வந்து கடலில் சங்கமமாகும் நதிகள், இடையில் சில இடங்களில் வடக்கு முகமாகத் திரும்பி ஓடுவதுவே உத்திரவாகினியாகும். கும்பகோணத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணஞ்சேரி என்கிற கிராமத்தையொட்டி, காவிரி உத்திரவாகினியாக ஓடுகிறது. காஞ்சி மகா பெரிசிராத்தம் செய்தார்யவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே . ஆதலால் இந்த ஸ்தலம் “கஜேந்திர மோட்ச ஸ்தலம்’ எனப்படுகிறது. காசி, கயை, குருúக்ஷத்திரம், சூர்ய குண்டம், பிரம்மசரஸ் ஆகிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா போன்ற மகா புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து, பித்ருக்களுக்காக அவரவரது சக்திக்கேற்ப தானம் கொடுப்பது அளவற்ற புண்ணிய பலனைத் தரும்.

  மஹாளய அமாவாசை அன்றுதான் பித்ருக்கள் அவர்களது உலகங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். ஆதலால், அன்று அவர்களை விசேஷமாக பூஜித்து, நமஸ்கரித்து, அவர்களை வழி அனுப்ப வேண்டும். கிடைத்தற்கரியது பித்ருக்களின் ஆசி. அதிலும் மஹாளய பட்சம் 15 நாள்களும் அவர்கள் நம்முடன் பரம கருணையுடன் தங்கியிருப்பதால், அதற்கேற்ப நாம் பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். மஹாளய பட்சத்தில் செய்யும் சிராத்தம், மற்றும் பித்ரு பூஜைகள் ஆகியவற்றின் புண்ணிய பலன் நமக்குப் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும்.

  சிரார்த்தம் செய்ய விருப்பமுடையவன் நோயின்றி, நல்ல சுபாவத்துடன் தீர்க்காயுள் உள்ளவனாகவும், பிள்ளை, பேரன்களுடன் கூடி வாழ்வான் என்றும் கூறுகிறது அக்னிபுராணம்.
  – என். பாலசுப்ரமணியன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,802FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-