Bharathi theerthar - 2026

சிலருக்கு ஒரு கேள்வி, “இந்தக் காரியத்தினால் எனக்கு சுகம் கிடைக்காது என்று தெரிந்தும்கூட மனிதன் மீண்டும் மீண்டும் அதே காரியத்தில் ஈடுபடுகிறான். ஏன்?” காமத்தினாலேயும் குரோதத்தினாலேயும் தான் மனிதன் இப்படித் தப்புகளைச் செய்கிறான் என்பதே அதற்குப் பதில்.

இங்கு இன்னும் ஒரு பிரச்சினை வருகிறது. “சாதாரண மனிதன் இப்படி செய்கிறான் என்று சொன்னால் அது வேறு, விஷயம் தெரிந்தவர்களும்கூட அப்படி செய்வார்களா? நல்ல பண்டிதர்களும் ரொம்ப படித்தவர்களும்கூட இப்படி செய்கிறார்களே! இதற்கு என்ன காரணம்?” என்கிற ஒரு கேள்வி பலருக்கு உண்டு.

பகவான் சொன்னார், “அவர்களுடைய ஞானம் அந்த சமயத்தில் மறைந்து போய் விடுகிறது” என்று


ஆவ்ருதம் ஞானமேதேன ஞானினோ நித்யவைரிணா I
காமரூபேண கெளந்தேய துஷ்பூரேணானலேன ச II

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, “நீ சொல்வது சரி! பெரிய பண்டிதர்களும் அப்படிச் செய்கிறார்களே என்று கேட்கிறாய். அவர்களுடைய அந்த ஞானமெல்லாம் சில சமயத்தில் மறைந்து போய் விடுகிறது” என்றார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending