தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடக்கம்: தலைமை ஹாஜி அறிவிப்பு!

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கும் என்று தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் 30 நாள்களிலும் நோன்பிருந்து தினமும் ஐந்து வேளை தொழுகை செய்வார்கள்.

மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பை தொடங்குவார்கள்.

இந்நிலையில் இன்று மாலை பிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்றும், ரம்ஜான் நோன்பு ஜூன் 15-ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்