திருவண்ணாமலையில் கார்த்திகை பிரமோத்ஸவம், நவ.11 தொடங்கி நவ. 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை அடுத்து, திருக்கார்த்திகை பிரமோத்ஸவத்திற்கான பந்தக்கால் நடும் விழா நவ.11 ஞாயிறு காலை நடைபெற்றது.
திருக்கோயில் மூன்றாம் பிராகாரம் சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. மகா ரதங்களுக்கு சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின் ராஜகோபுரம் முன் பந்தக்கால் நடப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் சேவுர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்