துறைமங்கலத்தில் இன்று தேரோட்டம்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள ஆலந்துறை அம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.

விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா, 19 ஆம் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து, நாள்தோறும் வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. இன்று காலை 9 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை குடிவிடுதல் மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.