Homeவிளையாட்டுஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் - 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்

09 July31 battmitton - Dhinasari Tamilஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் இந்திய வீரர்கள். சீனாவின் நான்ஜிங்கில் (Nanjing) ஜுலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளான நேற்று, இந்திய வீரர்களின் வெற்றிக்கணக்கை ஆரம்பித்துவைத்துள்ளார் HS பிரணாய். தனது முதல் சுற்றில், நியூஸிலாந்தின் அபினவ் மனோட்டாவுடன் மோதிய பிரணாய் அபினவ்வுக்கு கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல், 21-12, 21-12 என நேர் செட்களில் 28 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்துள்ளார். முதல் சுற்றின் மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் சமீர் வர்மா 21-13, 21-10 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் கார்வீயை வீழ்த்தினார். உலக ரேங்க் பட்டியலில் 19-வது இடத்தில் இருக்கும் சமீர், தனது 2-வது சுற்றில் 5 முறை உலக சாம்பியனான லின் டானை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில், அட்ரி மானு – ரெட்டி பி சுமீத் ஜோடி, பல்கேரியாவின் டேனியல் நிக்கோலோவ் – இவன் ருசேவ் ஜோடியை 21-13, 21-18 என வீழ்த்தியுள்ளனர். கலப்பு இரட்டையரைப் பொறுத்தவரை நான்கு ஜோடிகளும் வெற்றிபெற்றுள்ளன. சட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- அஷ்வினி பொன்னப்பா ஜோடி டென்மார்ர்கின் நட்சத்திர ஜோடியான நிக்லாஸ் நோஹர் – சாரா தைகெசென் ஜோடியை 21-9, 22-20 என வீழ்த்தியுள்ளனர். ப்ரனவ் ஜெர்ரி சோப்ரா – ரெட்டி என் சிக்கி, சௌரப் சர்மா – அனோஷ்கா பரிக், ரோஹன் கபூர் – குஹோ கர்க் ஆகிய கலப்பு இரட்டையர் ஜோடிகளும் தங்களது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவின் ப்ரஜக்தா சவந்த், சன்யோகிதா கோர்படே ஜோடி மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. தங்களது முதல் சுற்றில் துருக்கியின் பென்கிசு எர்செடின் – னஸ்லிகன் இன்சி ஜோடியை எதிர்கொண்டவர்கள், 20-22, 14-21 என செட்களை இழந்தனர். சாய்னா நேவால், கிடாம்பி ஶ்ரீகாந்த் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் இன்று களம் காண உள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,791FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...