பிரஜ்னேஷ் குனேஸ்வரன் புதுடெல்லி சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பிரஜ் னேஷ் குனேஸ்வரன் 146-வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் முன்னணி வீரரான யுகி பாம்ப்ரி 100-வது இடத் தில் இருந்து 107-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த வாரம் அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற யூரோப்பியன் ஓபன் தொடரில் பாம்ப்ரி முதல் சுற்றுடன் வெளி யேறியிருந்ததால் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவை சந்தித் துள்ளார்.
அதேவேளையில் மற் றொரு இந்திய வீரரான பிரஜ்னேஷ் குனேஸ்வரன் முன்னேற்றம் அடைந்துள்ளார். நிங்போ சாலஞ்சர் போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறி யதன் மூலம் இடது கை வீரரான பிரஜ்னேஷ் குனேஸ்வரன் தர வரிசைப் பட்டியலில் 170-வது இடத்தில் இருந்து 24 இடங்கள் முன்னேறி 146-வது இடத்தை பிடித் துள்ளார்.
ராம்குமார் ராமநாதன் ஒரு இடம் முன்னேறி 124-வது இடத்தையும், சுமித் நாகல் 312-வது இடத்தையும், சாதேகத் மைனேனி 316-வது இடத்தையும், அர்ஜூன் காடே 356-வது இடத்தையும் பிடித் துள்ளனர். இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா 30-வது இடத்தில் தொடர்கிறார். திவிஜ் சரண் ஒரு இடம் பின் தங்கி 39-வது இடத் திலும், லியாண்டர் பயஸ் 62-வது இடத்திலும், ஜீவன் நெடுஞ்செழி யன் 75-வது இடத்திலும், பூரவ் ராஜா 88-வது இடத்திலும் உள்ள னர். மகளிர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6 இடங்கள் முன்னேறி 200-வது இடத்தை பிடித்துள்ளார். கர்மான் கவுர் தாண்டி 215-வது இடத்தில் தொடர்கி றார். அதேவேளையில் பிரன்ஜலா 60 இடங்கள் முன்னேறி 280-வது இடத்தை பிடித்துள்ளார். லகோஸ், நைஜீரியாவில் நடைபெற்ற ஐடிஎஃப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் பிரன் ஜலா, தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.