உகாண்டாவின் கம்பாலா நகரில் நடக்கும் 64வது காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு நடக்கிறது. இதில், பங்கேற்க தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், இன்று உகாண்டா பயணமாகிறார்.
உகாண்டாவின், கம்பாலா நகரில் உள்ள முன்யோனோ ரிசார்ட்டில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஒவ்வொரு பொதுத்தலைப்பின் கீழ் நடைபெறும் இந்த மாநாடு, “Adaption, Engagement and Evolution of Parliaments in a Rapidly Changing Commonwealth “என்பதை பொதுத்தலைப்பாக கொண்டு இந்த ஆண்டு நடக்கவிருக்கிறது.
செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மாநாடு 29ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்கும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு , பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் சாபாநாயகர், அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இந்தியா திரும்புகிறார்.