love - 2026

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆர்.எஸ். பாரதி நகரில் வசித்து வருபவர்கள் பச்சமுத்து(96)- குள்ளம்மாள்(90) தம்பதி. இவர்களுக்குத் திருமணம் ஆகி சுமார் 73 வருடங்கள் ஆகின்றன.

இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 73 ஆண்டுகளாக இணை பிரியாமல் இருந்த இந்த தம்பதி, அப்பகுதியில் உள்ள அனைவரின் மனதையும் கவர்ந்தவர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, குள்ளம்மாளுக்கு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆனால், வயது முதிர்வின் காரணமாக குள்ளம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தன் மனைவி மருத்துவமனையில் இருக்கும் வரை நலமாக இருந்த பச்சமுத்து, மனைவி இறந்த சில நிமிடங்களிலேயே தானும் உயிரிழந்தார். 73 ஆண்டுகள் ஒன்றாக இருந்து, இறுதி பயணத்திலும் அவர்கள் ஒன்றாகவே சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending