curfew

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே சென்று வருவதை சீர்ப்படுத்தும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தது:
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்த அனுமதி அட்டைக்கும் அனுமதி கிடையாது.

நாளை ஞாயிற்றுக்கிழமை (மே.3)முழு ஊரடங்காக திருவாரூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும். இதில், அவசர மருத்துவ சிகிச்சைக்கும், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் ஏதும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending