23/09/2019 2:49 PM

விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றும் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று தொடங்குகிறது
புகைப்பட கலைஞர் எல். ராமச்சந்திரனின் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

மெட்லே ஆஃப் ஆர்ட் கலெக்ஷன் என்பது ஃபோட்டோக்களைக் அடிப்படையாக கொண்ட தொகுப்பு ஆகும். இது வடிவமைப்பாளர், கலை இயக்குனர், புகைப்படக் கலைஞர் எடுக்கும் ஒரு காட்சியை கலைகளின் வேலைபாடுகளுடன் வெளிப்படுத்துவதாகும்

இவை ஒவ்வொன்றும், வெவ்வேறு கருத்துக்களையும், வெளிப்படையான அலங்காரம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. முழு நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை உடல் வண்ணப்பூச்சுகள், மலர்கள், போன்ற பல்வேறு வெளிப்பாடுகளைப் பயன்படுத்தி நுணுக்கமான கலைத்திறனைச் வெளிபடுத்தியுள்ளார் கலைஞர் எல்.ராமகிருஷ்ணன். இந்த புகைப்பட கண்காட்சியின் மூலம், அவரது சமீபத்திய புகைப்படங்களானதிருநங்கைகளின் மாதிரிகள் இடம்பெற்று, சமூகத்தில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் மட்டுமே எல்.ராமச்சந்திரனின் புகைப்பட கண்காட்சிகள் இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது, முதல்முறையாக பிரத்யேகமாக சென்னையில் தனது புகைப்பட கண்காட்சி தொடர்களில் பலவற்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப் படங்களில் பெரும்பாலானவை புகழ்பெற்ற விருதுகளை வென்று சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளவை. அண்மையில் “ATIM”S Top 60 Masters of Contemporary Art” என்ற தலைப்பில் நடந்த நிகழ்சியில் விருதகள் பெற்றன. இந்த கண்காட்சி கலை ஆர்வலர்கள், கலை சேகரிப்பாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மற்றும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

“மெட்லி ஆஃப் ஆர்ட்” கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சி தொடக்க விழாவில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, நடிகர் சூரி, இயக்குனர் லிங்குசாமி, வடிவமைப்பாளர் ஜோர்மோ போஜானிமை, மாடல் அழகிகள் மேரி ஏலோகோ, நோமி கேப்பல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.Recent Articles

அரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.!

அந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்" என தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

Related Stories