நாகர்கோவில்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடிக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இது தூத்துக்குடிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர்,
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தூத்துக்குடி பொது மக்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.
இப்படி மிகப் பெரும் அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படுவது, தூத்துக்குடி மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் நல்லதல்ல என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் நிழலுடன் யுத்தம் செய்யும் வீரன் என்று பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது என மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.