மிளகாய்ப்பொடி தூவி ஒரு கிலோ தங்கம் கொள்ளை

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே நகை கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி ஒரு கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு கடை வீதி பகுதியில் திருப்பதி என்பவர் நகைக் கடை வைத்துள்ளார். இவரது உறவினர் செல்வராஜ் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு 1 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை ஒரு பையில் எடுத்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது காமராஜபுரம் அருகே செல்வராஜை வழிமறிந்த மர்மநபர்கள் இரண்டு பேர், அவர் மீது மிளகாய் பொடி தூவியுள்ளனர். பின்னர், பையை பறித்த மர்மநபர்கள், இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.

one-kg-gold-jewels-20-kg-silver-looted-dindugal-jewel-shop-owner