சென்னை பல்கலையில் 80 ஆண்டு முதல்… அரியர் இருந்தால் விண்ணப்பிக்கலாம்!

Published:

chennai university - 2026

சென்னை பல்கலையில் 1980 ஆம் ஆண்டு முதல் படித்தவர்களுக்கு அரியர் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்….

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி திட்டத்தில் அல்லது 80-81 ஆம் கல்வி ஆண்டு முதல் தற்போது வரை படித்தவர்களில் யாருக்காவது சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் அரியர் இருந்தால் அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம்

இதற்காக இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்வில் பங்கேற்கலாம் என்று சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் மாத தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பெற்று நவம்பர் 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

மேலும் விவரங்களை பல்கலை.,க்கு நேரில் வந்தும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img