கவனிக்க வேண்டிய கல்கி பேட்டி. கல்கி இதழின் சார்பில் ப்ரியன், 1982ம் வருடம் பிப்ரவரி மாதம் வாஜ்பாயீ அவர்களை பேட்டி கண்டபோது, கேட்ட கேள்வியும், அதற்கு வாஜ்பாயி அவர்கள் அளித்த பதிலும்!
கேள்வி: இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான, எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒரே தலைவர் இந்திரா காந்திதான் என்றும் அவரால்தான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்றும் கூறுகிறார்களே!
பதில்: இந்தியாவின் ஒற்றுமை எந்த தனி நபரையோ அல்லது எந்த கட்சியையோ நம்பி இல்லை. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தங்களை இந்த தேசத்துடன் ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு இந்தியனுடைய பொறுப்புணர்வும் தேசப் பற்றுமே இந்திய ஒற்றுமையை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட தலைவர்கள் வருவார்கள்; போவார்கள். அவர்களை நம்பி இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடு இல்லை.