உயரத்தில் ஓர் உலா

 

 

ஒரு நடைபாதையை சுற்றுலாதலமாக மாற்ற முடியுமா..? முடியும் என்கிறார்கள் சீனர்கள். அங்குள்ள லூஜியாஸுய் சர்குலர் நடைமேடையைப் பார்த்தால் இது புரியும்.

இது ஒரு மிகப் பெரிய வட்ட வடிவ நடைபாதை பாலம், இது பாதைகளையும் சுற்றி இருக்கும் நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. ஷாங்காய் பகுதியில் உள்ள புடோங் மாவட்டம் சமீபத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.

அதனால் இந்த பகுதியில் பல நிறுவனங்களும் வணிக மையங்களும் முளைத்தன. பாதசாரிகள் சிரமமின்றி போவதற்காக 20 அடி உயரத்தில் இந்த வட்டவடிவ பாலம் கட்டப்பட்டது. இதன் அகலம் 5.5 மீட்டர். 15 மனிதர்கள் பக்கவாட்டில் ஒருவருடன் ஒருவர் இடிக்காமல் நடந்து செல்லலாம்.

நடைபாதைக்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிகளும் உள்ளன. இரவு நேரத்தில் வண்ண மின்விளக்குகளில் பாலம் ஜொலிப்பது கண்கொள்ளாக்காட்சி. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக இது மாறியுள்ளது.

சரி, இங்கு எப்படி போவது? சென்னையிலிருந்து புடோங் விமான நிலையத்திற்கு டிராகன் ஏர், ஏர் இந்தியா விமான சேவைகள் உள்ளன. 12 மணி நேர பயணத்தில் சென்றடையலாம். ரிட்டர்ன் டிக்கெட்டுடன் கட்டணம் ரூ.57,040-ல் இருந்து தொடங்குகிறது.

ஷாங்காய் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டல் தங்குவதற்கு ஏற்றது. ஒருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.8,990.

நடைப்பாலத்தின் மேலே
நடைப்பாலத்தின் கீழே