
அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று டொனால்டு டிரம்ப், திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் பாணியில் சாபம் விட்டுள்ளார்.
தற்போது நடந்து வரும் மாகாண தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று கூறியுள்ளார் டிரம்ப்.
அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியின் டிரம்ப் 2017 ல் பதவியேற்றார்! மிகப்பெரும் பணக்கார தொழில் அதிபரான அவர் அடுத்த வருடம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.
ஆனால், அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது! இது தொடர்பாக பார்லிமென்ட் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மாகாண தேர்தல் நடந்து வருகிறது.
இதுவரை நடந்த தேர்தல்களில் பல்வேறு இடங்களில் குடியரசு கட்சி பெரும் தோல்விகளை சந்தித்து வருகிறது! கவர்னர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ள லூசியானா மாகாணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் டிரம்ப்.
அப்போது பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பெற்று வருகிறோம் இதைவிட சிறப்பானது விரைவில் நடைபெற உள்ளது! அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக என்மீது ஜனநாயக கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
இதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை; என்னுடைய தலைமையில் அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது! அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!
இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மோசமான நிலையை ஏற்படுத்திவிடும்! – என்று அவர் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களை பயமுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவ்வாறுதான், தான் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப் படாவிட்டால், நாடு மோசமாகிவிடும் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார். தான் தோல்வி அடைந்தபோது தமிழக வாக்காளர்களை படுகேவலமாக திட்டித் தீர்த்தார்! தமிழனுக்கு உணர்வில்லை, சூடு இல்லை சுரணை இல்லை என்றெல்லாம் திட்டித் தீர்த்தார். ஒருவேளை டிரம்பும் இவ்வாறு அமெரிக்க மக்களை திட்டித் தீர்க்கும் நிலை வருமோ?!