Australians-Indians-Glenn-Maxwell உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான போட்டி இது என்பதால், இரு அணி வீரர்களுமே கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தாங்கள் சந்திக்கவுள்ள அரையிறுதிப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்த கால ஆட்டங்களில், இந்திய அணியை நாங்கள் சிறப்பாகவே எதிர்கொண்டோம். எங்கள் அணியுடனான எந்த ஓர் ஆட்டத்திலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. அது அவர்களது நினைவில் நிச்சயம் நீங்காமல் இருக்கும் என நம்புகிறேன் என்றார். கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் அல்ல, விளையாட்டுக்கு முன்னரேயே வார்த்தைகளால் சீண்டிவிட்டு, எதிரணியினரை மனதளவில் பதட்டத்துக்கு உள்ளாக்குவதில் ஆஸ்திரேலியா என்றுமே முதலிடத்தில் உள்ளது. அது மேக்ஸ்வெல்லின் பேச்சிலும் வெளிப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending