கதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாள்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று இம் மாதம் 27 ஆம் திகதி நீர்வெட்டுடன் உற்சவம் இனிதே நிறைவுப்பெறவுள்ளது.

இதுவரை சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகள் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர் என, தெரிவிக்கப்படுகிறது.