​அஞ்சலி நிகழ்ச்சியில் ஒபாமாவின் மனைவிக்கு மிட்டாய் கொடுத்த ஜார்ஜ் புஷ்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஒபாமாவின் மனைவிக்கு மிட்டாய் கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாஷிங்டன்னில் உள்ள ஒரு தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், ஒபாமா, ஜார்ஜ் புஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அஞ்சலி நேரத்தில், புஷ் தனது மனைவியிடம் இருந்து மிட்டாய் ஒன்றை வாங்கி அதனை ஒபாமாவின் மனைவிக்கு கொடுத்தார். அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார் ஒபாமாவின் மனைவி.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது. அஞ்சலி நிகழ்வில் இதுபோன்று ஜார்ஜ் புஷ் நடந்துகொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.