செவ்வாய் கிரக ஆய்வில் இணையும்படி இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ மிக குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த ‘மங்கள்யான்’ விண்கலம், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முதல் முயற்சியிலேயே இந்தியா பெற்ற வெற்றி உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதன் காரண மாக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு இந்தியா தோள் கொடுக்க வேண்டும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்திய விண்வெளி வீரரின் தலைமையில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி வைக்கவும் நாசா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து நாசாவில் உள்ள ஜெட் புரோபல்ஷன் ஆய்வக இயக்குநர் சார்லஸ் இலாச்சி தனது உரையில் குறிப்பிட்டதாவது…

எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் களமிறங்க திட்ட மிட்டுள்ளோம். 2020 முதல் 2030 வரை செவ்வாய் கிரகம் தொடர் பான 6 திட்டங்களை நிறைவேற்ற எண்ணியுள்ளோம். இதற்கான கூட்டத்தில் பங்கேற்கும்படி இந்தியாவின் இஸ்ரோவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் இந்தியா நிச்சயம் பங்கேற்கும் என நம்புகிறோம். செவ்வாய் கிரகத்துக்கு மனிதர் களை அனுப்பி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இந்தியா வும் இதில் ஆர்வமாக இருக் கிறது. மேலும் இந்த ஆய்வுக்கு இந்தியா ஆக்கப்பூர்வமான வகை யில் பங்களிக்கும். அதற்கான வல்லமையும் இந்தியாவிடம் இருக்கிறது – என்று அவர் கூறினார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending