2 - 2026இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பேட்டிங் தேர்வு செய்தார்.

3 - 2026தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன் டி காக் துவக்கம் தந்தனர். பும்ரா ‘வேகத்தில்’ ஆம்லா (6) சிக்கினார். மீண்டும் வந்த பும்ரா இம்முறை குயின்டனை (10) அவுட்டாக்கினார். இதன் பின், சகால் ‘சுழல்’ ஜாலம் காட்டினார். இவரது ஒரே ஓவரில் துசென் (22), கேப்டன் டுபிளசி (38) சிக்கினர். டுமினி 3 ரன்களில் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால், தென் ஆப்ரிக்க அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.

1 - 2026தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் மட்டும் எடுத்தது. ரபாடா (31) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய வெற்றிக்கு 228 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சகால் அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending