வல்லகி யோகம் அமையப்பெற்றவரா நீங்கள்?

புத்திசாலியாகவும்,சொற்பொழிவு ஆற்றுபவனாகவும், கல்விமானாகவும், நற்குலத்தில் பிறந்தவனாகவும் அமையப்பெற்றவர்.

astro 2வல்லகி யோகம்:
லக்கினம் இருக்கும் வீட்டிலிருந்து தொடர்ந்து ஏழுக்கட்டங்களுக்குள் அனைத்துக் கிரகங்களும் வரிசையாக அமைந்திருந்தால் அது வல்லகி யோகம் ஆகும்

 

ஜாதகனின் பண்புகள்:

இவ்வாறு கிரக அமைப்பைப் பெற்ற ஜாதகன் நற்சிந்தனை உடையவனாகவும், சுறுசுறுப்பானவனாகவும், நீதிநெறித்தவறாதவனாகவும் அறசெயல்களால் பெறப்படும் புண்ணியத்தை ஈட்டுபவனாகவும், அதிகாரமுள்ளவனாகவும்,கீர்த்திப் பெற்றவனாகவும்,  புத்திசாலியாகவும்,சொற்பொழிவு ஆற்றுபவனாகவும், கல்விமானாகவும், நற்குலத்தில் பிறந்தவனாகவும்,நுட்ப அறிவு பெற்றவனாகவும் விளங்குவான்.

ராகு கேதுக்களைத் தவிர்த்து மற்றக்கிரகங்கள் வரிசையாக இருக்கவேண்டும். ராகுவோ, கேதுவோ தனித்து இந்த 7 கட்டங்களுக்குள் அமைந்தால் அது வல்லகி யோகமாக கணக்கிடக் கூடாது. ராகுவும்,கேதுவும் ஏழுகட்டங்களுக்கு அப்பால் இருப்பின் அதனால் பாதகம் ஒன்றுமில்லை.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.