கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா உள்ளிட்ட சிலர் மீது நிலமோசடி வழக்கு தொடர்ந்தார்.
விஷ்ணு விஷால் தயாரித்த ‘வீர திர சூரன்’ படத்தில் நடித்ததற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.40 லட்சத்திற்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை வாங்கி தருவதாக கூறி கூடுதலாக ரூ.2. கோடியா 70 லட்சத்தை பெற்றுக்கொண்டு, நிலமும் வாங்கி தராமல், பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், ரமேஷ் குடவாலா கைது செய்யப்பட வாய்ப்பு இருந்த நிலையில், அவர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு சூரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். எனவே, வேறு நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் எனத்தெரிகிறது. அவர் ஏன் விலகினார் என்பது பற்றிய காரணம் தெரியவில்லை.
Source: Vellithirai News