லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை.
எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டீசர் வீடியோ நாளை தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய் கண் பார்வை அற்றவராக நடிப்பது தெரியவந்துள்ளது. அவரின் பெயர் ஜான் துரைராஜ். இவரை சுருக்கமா ஜே.டி. என அழைப்பார்களாம். கல்லூரி மாணவர்களின் டீனாகவும், ரகசிய போலீசாகவும் நடித்துள்ளாராம். மேலும், அதிகமான குடிப்பழக்கத்தால் கண் பார்வையை இழக்கும் அவர், போதை மருந்து கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதே கதை என செய்தி கசிந்துள்ளது.
மாஸ்டர் படம் தொடர்பாக இதுவரை வெளியான சில போஸ்டர்கள் விஜய் கருப்பு கண்ணாடி அணிந்து காணப்படுவது இதை உறுதி செய்துள்ளது.
Source: Vellithirai News