வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதுவும் நேற்று மாலை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில், சேலம், நாமக்கல், கன்னியாகுமார், ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்னும் 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 15ம் தேதி கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
Source: Vellithirai News