October 20, 2021, 11:54 am
More

  ARTICLE - SECTIONS

  மனைவி இல்லாமல் இரவு பார்ட்டி! வெடிக்கும் விவாகரத்து விவகாரம்!

  naga chaithanya 2
  naga chaithanya 2

  பிரபல பாலிவுட் நடிகரான ஆமீர் கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் கொடுத்த இரவு விருந்தில் நடிகை சமந்தா புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா.

  தற்போது தெலுங்கு, தமிழ் சினிமாவில் நாகசைதன்யா சமந்தாவின் விவாகரத்து விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

  இவர்கள் இருவரும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து பெற போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

  naga chaithanya
  naga chaithanya

  இந்த தகவல் குறித்து நாக சைதன்யா மற்றும் சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய போது இருவருமே அதுகுறித்து நேரடியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் அண்மையில் வெளியானது.

  இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலையும் குவித்து வருகிறது.

  naga saithanya
  naga saithanya

  நாகசைதன்யா அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்துள்ளார்.
  இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா பாலிவுட்டில் நடித்து வரும் லால் சிங் சதா படத்தின் கோ ஸ்டாரான பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான் லவ் ஸ்டோரி படத்திற்கு புரமோட் செய்யும் வகையில் அண்மையில் ஹைத்ராபாத் சென்றார்.

  அப்போது ஆமீர் கானுக்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தங்களின் வீட்டில் இரவு விருந்து கொடுத்துள்ளனர். நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் ஆமீர் கானுடன் மாலை நேரத்தை அனுபவிக்கும் பல போட்டோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன.

  samantha 5
  samantha 5

  அதில் சாய்பல்லவி, நாகசைதன்யா, நாகார்ஜூனா உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  ஆனால் அந்த போட்டோக்களில் ஒன்றில் கூட நடிகையும் நாக சைதன்யாவின் மனைவியுமான சமந்தா இல்லாதது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

  naga arjun
  naga arjun

  சமந்தா தி பேமிலி மேன் தொடரில் மோசமான காட்சிகளில் நடித்ததால் அவரை அக்கினேனி குடும்பம் எச்சரித்ததாகவும் அதை கேட்காத சமந்தா விவகாரத்து வரை சென்றதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

  அதிலும் சமந்தா கணவர் நாகசைதன்யா குடும்பத்தினர் தனக்கு 50 கோடி ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும் என கெடுபிடியாக கூறியதாகவும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து நேற்று நாகசைதன்யா வெறும் வந்தந்தி என கூறி விவாகரத்துக்கு செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

  party
  party

  இதனிடையே ஆமீர்கானுடனான இரவு விருந்தின் போது நாகார்ஜுனா உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் உரையாடலின் போது படத்தில் சைதன்யாவின் கதாபாத்திரத்திற்கு பால ராஜு என்று பெயர் வைத்தது குறித்து பேசிய நாகார்ஜூனா, தனது தந்தை அக்கினேனி நாகேஸ்வராவும் அதே பெயரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறி உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

  நடிகை சமந்தா ஆமீர் கானுக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது தம்பதியர் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக பரவி வரும் வதந்திகளை மேலும் தூண்டியுள்ளது.

  naga chaithanya 1
  naga chaithanya 1

  ஆமீர் கானுக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் நாகார்ஜூனா குடும்பத்தினர் நடிகை சமந்தாவுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  இதில் சமந்தா இல்லாதது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. என்ன தான் லவ் ஸ்டோரி படத்தின் வெற்றியை கொண்டாடினாலும் கட்டின மனைவி இல்லாமலா என முணுமுணுக்கிறது டோலிவுட்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,567FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-