2019 இல் புதிய ஆட்சி மலர வாரம் ஒரு நாள், ஆண்டு முழுவதும் உண்ணாவிரதம் இருக்க டில்லி ஆர்ச் பிஷப் அழைப்பு விடுத்திருக்கிறார்!
நாட்டில் அசாதாரண அரசியல் சூழ்நிலை இருக்கிறதாம். அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட ஜனநாயக மரபுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாம்!
தமிழ் மன்னன் ராஜராஜனின் பெரிய கோவில் தீர்த்தவாரியை கிறிஸ்தவர்கள் தடுத்ததைச் சொல்கிறாரா?
கேரள கிறிஸ்தவ மீனவர்களைக் கொன்ற இத்தாலிய மாலுமிகளை விடுவிக்க கார்டினல் அலன்செரி தலையிட்டதைச் சொல்கிறாரா?
தேர்தலுக்கு முன் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பகிரங்க அறிக்கை விட்டு மதவாத அரசியல் செய்யும் கிறிஸ்தவ திருச்சபைகள் பற்றி பேசுகிறாரா?
ஏழைக் குழந்தைகளுக்கு அரசு நிதியிலிருந்து அனைவருக்கும் கட்டாயக் கல்வி கொடுக்கும் RTE சட்டத்தை ஏற்காமல் இருக்கும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசுகிறாரா ?
பாதிரியார் சொல்ல வருவது என்னவோ எனக்குப் புரியவில்லை !
ஆனால் ரோஷக்காரரு !
ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான அரசிடமிருந்து கிறிஸ்தவ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று அறிவித்துவிட்டு .உண்ணாவிரதம் இருக்க அழைப்பு விடுவாரா ரோஷக்கார தில்லி ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ?