தேவையானப் பொருட்கள் :
தடியங்காய் – கால் கிலோ
புளிக்காத தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 1
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 2
பூண்டு – 2 பல்
நெய் – 1 தேக்கரண்டி
கறிவேப்பில – சிறிதளவு
உப்பு – தேவையான அளவுசெய்முறை :
தடியங்காயை 1 இஞ்ச் நீளத்தில் நறுக்கி குக்கரில் போட்டு நீர் விட்டு 1 வீசில் வரும் வரை வேகவிடவும்.
வரமிளகாய்,சீரகம்,தேங்காய்த்துருவல், சின்னவெங்காயம், பூண்டு ஆகியவற்றை கரகரப்பாக அரைத்து அதனை வேக வைத்த தடியங்காயுடன் சேர்த்து, உப்புப் போட்டு கொதித்ததும் தயிர் விட்டு கறிவேப்பிலை, சீரகம் நெய்யில் தாளிக்கவும்.கூட்டுத் தயார்.
Leave a Reply